ரேசன் கடைகளில் சோப்பு போன்றவை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

 
i

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடிமைப் பொருட்கள் வாங்கும் போது சோப்பு உள்ளிட்ட மற்ற  பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது, எச்சரிக்கையை மீறும்  கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Jewelry loan waiver for 97%: Minister I. Periyasamy | PiPa News

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை குட்டத்துப்பட்டி ஆகிய ஊர்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நேர நியாய விலைக் கடைகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை பாமாயில், மண்ணெண்ணை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

நியாய விலை கடைகளில் பொது மக்கள் அரிசி, கோதுமை, பருப்பு, போன்ற பொருட்கள் வாங்கும் போது கூடுதலாக சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க வேண்டும் என ரேசன் கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்த கூடாது. மக்கள் விரும்பும் பொருட்களை மட்டும் வாங்கிக் கொள்ளலாம், இதனையும் மீறி பொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும்  ரேஷன் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்றார்.