நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியாது - துரைமுருகன் உருக்கம்

 
duraimurugan


நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என்று எனக்கு தெரியாது என்றும், ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார். 

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில்  110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் அதிமுக தவிர்த்து பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி பாராட்டி பேசினர். அப்போது பேசிய துரைமுருகன் கடந்த ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் செய்த பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு பேசினார். 

CM M.K.Stalin - Duraimurugan

தன் பேச்சின் இறுதியில் "தான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும்" என  பேரவையில் உருக்கமாக பேசினார். அப்போது இடையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, எல்லோருடைய வாழ்த்துகளுடன் நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100 ஆண்டுகள் வரை இருப்பீர்கள் என அமைச்சர் துரைமுருகனை பார்த்து கூறினார்.