அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகள் முடக்கம்!!

 
tn

தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. 

tn

தமிழக அமைச்சரவையில் கால்நடை வளம் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றியவரும்,  தற்போது மீன்வளத்துறை,  மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் உள்ளவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அத்துடன்தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முக்கிய பங்கு வகிக்கிறார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2001 ,2006 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பிலும்,  2010 மற்றும் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2009 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து வெளியேறி அனிதா ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

ttn

இந்நிலையில் தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 - 2006 ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ₹6.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது