12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு அறைகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

 
anbil-mahesh-3

12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

minister anbil mahesh explain regarding 10 12 public exam | 10, 12-ம்  வகுப்புகளின் பொதுத் தேர்வில் நடத்தி முடிக்காத பாடத்திலிருந்து கேள்விகள்  இருக்காது - அமைச்சர் ...

இந்நிலையில், சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு அறையை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தேர்வு வினாத்தாள் அனைத்தும் எவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நேரில் பார்வையிட்ட அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மேலும் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வெழுதும் அறைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் நேரில் பார்வையிட்டார் .இந்த ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல், கட்டுகாப்பு மைய பொறுப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழகம் முழுவதும் நாளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.  அதற்காக தீடீர் ஆய்விற்காக அதிகாரிகள் மட்டுமின்றி துறையின் அமைச்சராக நானே நேரில் ஆய்வு செய்துள்ளேன். இந்த சாந்தோம் பள்ளியில் ஆய்வு செய்த போது, வினாத்தாள் வைக்கப்பட்ட கட்டுக் காப்பு அறையை நேரில் பார்வையிட்டேன். ஒவ்வொரு அறைக்கும் 2 பூட்டுகள் போடப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு  நிறுத்தப்பட்டுள்ளதாகவும். கட்டுகாப்பு அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளது. நாளை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.