பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

 
anbil

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அச்சமின்றி தைரியமாக தேர்வு எழுதுமாறு மாணவர்களை அறிவுறுத்தினார். 

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  காலை 10 மணிக்குத் தொடங்கியது. இன்று மொழிப் பாடத் தேர்வு(தமிழ்) நடைபெறுகிறது. 3,119 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321  மாணவர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் அருகே சாந்தோமில் உள்ள புனித ரஃபேல் மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களை சந்தித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வாழ்த்து தெரிவித்தார்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: இன்று பொது தேர்வு எழுதும் மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இன்று காலை முதல்வர் தனது வாழ்த்தையும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும் என்று சொன்னார். அதன் அடிப்படையில் அவரது வாழ்த்தையும் குழைந்தைகளுக்கு சொல்லி உள்ளேன்.

anbil-mahesh-3

தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, தன்னம்பிக்கையுடன் தேர்வெழுத அறிவுறுதியுள்ளோம். குழந்தைகளும் அச்சம் இன்றி மகிழ்வுடன் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு, புதுவை முழுவதும் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் துறையின் சார்பாக வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறோம். இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் தமிழர்கள் குழந்தைகள் கல்வி குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். வரும் ஜூலை இறுதிக்குள் அனைத்து பொது தேர்வு முடிவுகளும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ உள்ளிட்ட மற்ற பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் போது நமது பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியாக வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் என்ன எழுதுகிறார்களோ அதற்கு ஏற்ற மதிப்பெண் கட்டாயம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.