அரசு பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் துபாய் பயணம்

 
anbil magesh anbil magesh

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 68 அரசு பள்ளி மாணவர்கள் துபாயில் நடைபெறும் பன்னாட்டு புத்தக விழாவில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பயணம் செய்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் துபாய் சென்றார்.

anbil magesh

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்து செல்ல வேண்டியது, ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக அப்போது அவர்களை அழைத்து செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை அழைத்து செல்கிறோம். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன்.  தற்போது மாணவர்களை சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்