தொழில் கல்வியில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் - மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

 
anbil magesh

தொழில் கல்வியில் கவனம் செலுத்தி ஒவ்வொரு மாணவர்களும் முன்னேற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை வழங்கியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரத மிகுமின் தொழிற்சாலை மையத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் தொழில்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: தொழில் கல்வி என்பது ஒருவரை நாடி நாம் செல்ல தேவையில்லை. நமக்கு நாமே முதலாளி. ஆகையால் இந்த தொழில் கல்வியில் கவனம் செலுத்தி ஒவ்வொரு மாணவர்களும் முன்னேற வேண்டும்

முன்னதாக தமிழகத்தில் முதன் முதலாக லால்குடியில் அமைக்கப்பட்ட மெய்நிகர் நூலகம் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்த வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் 76 நூலகங்களுக்கு ஒரு நூலகத்திற்கு 2 மெய்நிகர் கருவிகள் விதம் 152 மெய்நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளில் உள்ள நூலகங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு கூறினார்.