கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், குறைவான நேரத்தில் பயணிக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது மெட்ரோ ரயில். சென்னையில் மெட்ரோ ரயில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ இரயில் போக்குவரத்து சேவையில், சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ இரயில்கள் இயக்குவதில் தற்காலிகமாக சற்று நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியிலும், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கி மலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறை சரிபார்த்து கொண்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விரைவில் மெட்ரோ இரயிகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.