‘மெட்ரோ மியூசிக் ஃபெஸ்ட் 2023’ - பயணிகளை கவர இசை நிகழ்ச்சி நடத்தும் மெட்ரோ நிர்வாகம்..

 
 ‘மெட்ரோ மியூசிக் ஃபெஸ்ட்  2023’ -  பயணிகளை கவர இசை நிகழ்ச்சி நடத்தும் மெட்ரோ நிர்வாகம்.. 

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், ‘மெட்ரோ மியூசிக் ஃபெஸ்ட் 2023’ என்கிற இசை நிகழ்ச்சியை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளை கவர்வதற்காக சென்னை மெட்ரோ ரயில்  நிறுவனம் அவ்வப்போது பல இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்குழுக்களுடன் இணைந்து  பல நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளது.  அதன் வரிசையில் மார்க் மெட்ரோ மற்றும் எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ் உடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.  சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால், ரக்‌ஷிதா இணைந்து தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்பட பாடல்களை பாட உள்ளனர். ஜனவரி 21ம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.  

சென்னை மெட்ரோ

இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ. 550 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த டிக்கெட்டுகள் பேடிஎம் இன்சைடர் இணையதள பக்கத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.  பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் சென்னை மெட்ரோ ரயில் நிலையம், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம், திருமங்கலம் மெட்ரோ, ஆயிரம் விளக்கு மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த இசை நிகழ்ச்சியில் முதலில் வருபவர்களுக்கு முதலில் இருக்கைகள் ஒதுக்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.