மேகதாது வழக்கு - தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 
tn

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16 வது கூட்டம் வருகிற 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  அத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதம் செய்ய,  தமிழக அரசு ஒப்புக்கொள்ளக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.  இந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக கடந்த மூன்று முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்த தமிழக அரசு மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

tn

இந்நிலையில்  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ் நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.  மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

govt

அத்துடன் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீர்பங்கிடும் முறையாக வழங்கப்படவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டிய நிலையில் ,அதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடகா அரசு, தமிழகத்தில் முறையாக நீர் பங்கீடு அளிக்கப்படுவதாக தெரிவித்தது.  அத்துடன் மேகதாது விவகாரத்தை காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க விரும்புவதாகவும் கர்நாடக அரசு தெரிவித்தது.

supreme court

இந்நிலையில் 22ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக்கூடாது . 2018 ஆம் ஆண்டில் இருந்து மேகதாது பிரச்சனை இருக்கிறது . ஒரு வாரம் ஒத்தி வைத்தால் ஒன்றும் ஆகாது.  மேகதாது பற்றி விவாதிக்காலமா என்பதை காவிரி ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அரிய விரும்புவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்த நிலையில் ,வழக்கை 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.