பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 2.50 லட்சமாக உயர்வு - அரசாணை வெளியீடு!!

 
govt

பத்திரிகையாளர் நல நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Press reviews 08.07.2021 - Unimpresa International

பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் 'பத்திரிகையாளர் நல வாரியம்' அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள்ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. 

tn

இந்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியில் இருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவி தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.