"சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் துணிச்சல் பெற்றிருப்பதையே இது காட்டுகிறது" - அன்புமணி வேதனை!!

 
anbumani

தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்  என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

null



இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வளங்கள் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற ’நியூஸ் தமிழ் 24x7’ செய்தி குழுவினரை கனிமவளக் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மிரட்டி, தாக்க முயன்றிருப்பது கண்டிக்கத்தக்கது. கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக புகார் கொடுத்த சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டதற்கு அடுத்த சில நாட்களில் இந்த நிகழ்வு நடந்திருப்பது கவலையளிக்கிறது. சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் துணிச்சல் பெற்றிருப்பதையே இது காட்டுகிறது. இது நல்லதல்ல! ஊடகக் குழுவினரை மிரட்டியவர்களையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும்  காவல்துறை கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையினரும் உறுதி செய்ய வேண்டும்!" என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

tn

இருப்பினும் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் , குமரி மாவட்டம் திருவட்டாறு, மேக்கோடு, சித்திரங்கோடு பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் இயங்கி வரும் கல்குவாரி தொடர்பான செய்தி தொலைக்காட்சியில் அரசு அனுமதி பெறாமலும்,  சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்துவதாகவும்,  தவறான தகவல்களை வெளியிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளிவந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்