மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 
mayiladuthurai

நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

mayiladuthurai news, துலா மாத பிறப்பை முன்னிட்டு காவிரியில் குவிந்த  பக்தர்கள்; அதிகாலை முதலே புனித நீராடி வழிபாடு! - a large number of devotees  take a holy bath in ...

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.  பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு  வருகிறது. சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரியீல் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.  

அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1ம் தேதி துலா உற்ச்சவம் தொடங்கிய நிலையில் கடைசி பத்து நாள் உற்சவம் இன்று வதான்யேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது .  ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்த வாரி வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வருகின்ற 19ஆம் தேதி சனிக்கிழமை ஈடு செய்யும் வகையில் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.