மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 
rain school leave

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி ,கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை 14/11/2022ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவத்த ஆட்சித் தலைவர் திருமதி. இரா. லலிதா.இ, ஆ,ப, அறிவித்துள்ளார்.

முன்னதாக கேரள -  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  நாளைதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.