மே 20 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!

 
tn

மே 20 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரீத் அறிவித்துள்ளார்.

tn
ஊட்டியில்  மலர் கண்காட்சி  ஆண்டுதோறும் நடைபெறுகிறது. கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நிலையில்,  தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.  அந்த வகையில் இந்தாண்டு ஊட்டி மலர் கண்காட்சி 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இதனால்   பிரமாண்ட மேடை, அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 20ம் தேதி மலர் கண்காட்சி துவங்குகிறது.  உதகை மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில்,  நீலகிரி மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்றும், அதை ஈடுசெய்ய ஜூன் 4ஆம் தேதி வேலைநாளாக இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.