அழகு முத்துக்கோன் பிறந்தநாளில் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்!!

 
ttv dhinakaran

அழகு முத்துக்கோன்  பிறந்தநாளில் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்.இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். 

tn

இதனால்  ஆங்கிலேய அரசு கோபமுற்ற நிலையில் வீர அழகுமுத்துக்கோன்  பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தினர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

tn
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "'உயிரை விட மானம் பெரியது' என்ற வீர முழக்கத்துடன் ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளை நெஞ்சில் ஏந்திய மன்னர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்.  இந்திய திருநாட்டு விடுதலைப் போர்க்கள  வரலாற்றில் ஆற்றல்மிகு தமிழ் மன்னர் அழகு முத்துக்கோன் அவர்கள் என்றென்றும் அழியாத சரித்திரமாக இடம்பெற்றிருப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.