ரேஷன் கடை பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு

 
ration shop

நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 12 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ration

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில்  , நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் எனவும், 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கத் தேவையான சிறப்புத் துணைவிதி திருத்தம் மேற்கொள்ளப்படுவது, மற்றும் அது தொடர்பான உரிய ஒழுங்கு முறை விதிகளை ஒவ்வொரு சங்கத்திலும் ஏற்படுத்துவது குறித்தும் தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது  அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக (270 நாட்களிலிருந்து 365 நாட்களாக) உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Ration shop

இதன் மூலம் ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலை கடைகளில் ஆறு மாதம் மட்டுமே மகப்பேறு விடுப்பு தருவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.