சமையல் கற்றுக் கொள்ளச் சொன்னதால் திருமண பெண் தற்கொலை

 
m

திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் புகுந்த வீட்டிற்கு போகும்போது சமையல் கற்றுக் கொண்டு போக வேண்டும்.  அதனால் சமையல் செய்யக் கற்றுக் கொள் என்று மகளை தாய் திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.   இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 நெல்லை மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி அருகே கீழக்கோடன்குளம்.   இப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இளம் பெண் கிறிஸ்டில்லா மேரி.  இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது.  வரும் ஒன்றாம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.  இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டாரும் கவனித்து வந்து உள்ளனர்.

b

 இந்த நிலையில் தொடர்ந்து செல்போனில் மூழ்கிக் கிடந்திருக்கிறார்.    பெற்றோர் வீட்டு வேலைகள் எது  சொன்னாலும் செய்யாமல் செல்போனில் மூழ்கிக் கிடந்திருக்கிறார்.   இதனால் எரிச்சல் அடைந்த தாய்,   திருமணத்திற்கு பிறகும் இது போல் இருக்க முடியாது.  அங்கு சென்றதும் சமைக்க வேண்டும் . அதனால் முதலில் சமைக்க கற்றுக்கொள் என்று சொல்லி திட்டி இருக்கிறார். 

 இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மேரி மீண்டும் செல்போனிலேயே  மூழ்கி கிடந்திருக்கிறார்.   இதனால் ஆத்திரம் கொண்ட தாய்  கடுமையாக மகளைத் திட்டி இருக்கிறார் .திருமணத்திற்கு முன்பு ஒழுங்காக சமைக்க கற்றுக் கொள் என்று திட்டி இருக்கிறார்.   இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மேரி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .

மருந்தை குடித்ததும் மயங்கி விழுந்த அவரை கண்ட தாய் பதறி அடித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார் .   அங்கு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சிகிச்சை பலன் என்று உயிரிழந்திருக்கிறார்.   இது குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.