உடல் இன்பத்திற்கு மட்டுமல்ல திருமணம் -சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

 
ம்

 திருமணம் என்பது உடல் இன்பத்திற்கு மட்டுமல்ல; திருமணத்தின் அடிப்படை நோக்கமே சந்ததியினரை  உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்திருக்கிறது.

 சென்னையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவி,   தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.   நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஹி

 அப்போது விசாரணைக்கு பின்னர் நீதிபதி,   திருமணம் என்பது சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்பது தான்.  அதுதானே தவிர உடல் இன்பத்திற்காக மட்டுமல்ல என்று சொன்னார்.  அவர் மேலும்,   குழந்தைகளை தாயை விட்டு பிரிப்பது அவர்களை துன்புறுத்துகின்ற செயல்  எனவும் தெரிவித்தார்.

  தொடர்ந்து தீர்ப்பில் கூறிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  இது ஒரு மனிதாபிமானமற்ற செயல்.  அது மட்டுமல்லாமல் குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதாகும் எனச் சொல்லி இரண்டு குழந்தைகளையும் தாயின் தற்காலிக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் .

திருமணத்தின் அடிப்படை நோக்கமே சந்ததியினரை  உருவாக்கத் தானே தவிர,  உடல் இன்பத்திற்கு மட்டுமல்ல என்கிற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.