கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த நபர்... லாரி ஏற்றி கொன்ற கொடூரம்...

 
கொலை

கரூரில் சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரிக்கு எதிராக போராடியவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த நபர்.. லாரி ஏற்றி கொன்ற கொடூரம்..

கரூர் மாவட்டம் குப்பம் அருகே க.பரமத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. அதற்கு அருகே செல்வகுமார் என்பவர் கல்குவாரி  நடத்தி வந்துள்ளார். நிலத்தகராறு தொடர்பாக ஜெகநாதனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் செல்வகுமார் நடத்தி வந்த கல்குவாரியின் உரிமம் முடிந்துவிட்ட பிறகும் சட்ட விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த கல்குவாரியை மூட வலியுறுத்தி ஜெகநாதன் கனிமவளத் துறைக்கு புகார் மனு அளித்திருக்கிறார். அதன் பேரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செல்வகுமாரின் கல்குவாரி அண்மையில் மூடப்பட்டது.

இறப்பு

இந்த நிலையில் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்த ஜெகன்நாதன் மீது அவ்வழிய வந்த லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகநாதன் நிகழ்விடத்திலேயே உயரிழந்தார்.  இதுகுறித்து க.பரமத்தி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி செல்வக்குமாருக்கு சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் லாரி ஓட்டுனர் சக்திவேல் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமுறைவாக இருக்கும் அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2019ம ஆண்டு  ஜெகன்நாதனை கொலை செய்ய முயற்சித்ததாக , செல்வகுமார் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.