சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபர் கைது!!

 
tn

சென்னை ஜாம் பஜாரில் பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tn

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் புழக்கம்  அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

arrest

பீடா கடை ஒன்றில் போதை சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சோதனை செய்ததில் போதை சாக்லேட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.  கடையிலிருந்து சுமார் 7 கிலோ போதை சாக்லேட்டுகள் போலீசாரினால் பறிமுதல் செய்யப்பட்டது.  அத்துடன் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர்யாதவ்  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் பீகாரில் இருந்து போதை சாக்லேட்டுகளை வரவழைத்து சென்னையில் விற்பனை செய்து வந்தது அம்பலம் ஆகியுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.