செருப்பில் மகாத்மா காந்தி படம் - அமேசான் மீது என்ன நடவடிக்கை?

 
ga

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.  

g

 அந்த மனுவில், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செருப்புகள் மற்றும் உள்ளாடைகளில் மகாத்மா காந்தி,  கடவுள்களின் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன.  ஆகவே,  அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 

 சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இந்த செயல்பாடு இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுகின்ற வகையில் உள்ளது.  மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் இருக்கிறது என்று கோரி இருந்தார் .

g

நாட்டு மக்களிடையே விரோதத்தை தூண்டுகின்ற வகையில் செயல்படுகின்ற இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி,  மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

sandals

 இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா,  கிருஷ்ணகுமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது .  இந்த மனு மீது மத்திய , மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.