மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து!!

 
tn

மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. 

tn

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில்கள் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மதுரையில் காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை மதுரை சிறப்பு ரயில் ஆகியவை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.

ttn

வருகிற செப்டம்பர் 10ம் தேதி வரை 6 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் ரயில் பாதையை  பலப்படுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்த உடன் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.