மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை

 
Madurai Medical collage

மதுரை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

மதுரை மருத்துவக் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று  மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி  மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மானவ மாணவியர் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர்.ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றதில் சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ptr

இதனை கேட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அப்போதே கல்லூரி முதல்வரிடம் இது குறித்து கேட்டு கோபம் அடைந்துள்ளார். இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளதாக தெரிகிறது. சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றது தொடர்பாக விளக்கம் கேட்ட போது NMC தளத்தில்  உறுதிமொழி படிவத்தை மாணவ சங்க தலைவர் பதவிறக்கம் செய்து வாசித்து விட்டதாகவும், அவர் என்னிடம் அல்லது பேராசிரியரிடம் அதை காட்டியிருந்தால் இந்த மாதிரி தவறு நடந்திருக்காது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.