காம உணர்வு பகுத்தறிவை குருடாக்கிவிடும்- பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கருத்து

 
abuse

ஆற்றில் குளிக்க சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று  கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு கீழமை விதித்த ஆயுள் கால தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Fourteenth Year Of Madurai Bench Of Madras High Court

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் கடந்த 2013 விஜய் விஜயதசமி நாளன்று பேச்சிப்பாறை அணை கால்வாயில் குளிக்கச் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். உடனே அந்த பெண் கூச்சலிடவும், அவரை அதே கால்வாயில் தண்ணீரில்  மூழ்கடித்து கொலை செய்தார். 

இந்த வழக்கில் கிழமை நீதிமன்றம் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் கோரி மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார், இந்த வழக்கு நீதிபதி பி என் பிரகாஷ் , ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பில் கால்வாயில் குளிக்கச் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது பெண் சப்தமிட்டதை அடுத்து இத்தகைய கொடூர கொலை சிரிதும் இரக்கம்இன்றி செய்துள்ளார்.கொலை செய்தற்கான சாட்சிகள், ஆதாரங்கள் மருத்துவர் வாக்குமூலம் மருத்துவ சான்று தெளிவாக உள்ளது. இதன் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. 

இதுபோன்ற குற்றங்கள் ஆண்களின் இச்சைக்கு அடிபணியாததால் நிகழ்கின்றன. பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை  குருடாக்கிவிட்டது. எனவே இந்த வழக்கில்  நீதிமன்றம் குற்றவாளிக்கு  தயவு தாட்சண்யம் காட்ட எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்கிறது என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.