மதுரை எய்ம்ஸ் தலைவர் மருத்துவர் நாகராஜன் காலமானார்

 
tn

பிரபல மூளை நரம்பியல் மருத்துவரும்,  மதுரை எய்ம்ஸ் தலைவருமான டாக்டர் நாகராஜன் மாரடைப்பு காரணமாக காலமானார்.  மதுரையில் உள்ள விஎன் நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன் மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை தலைவராகவும் , சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆற்றல்சார் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

tn

கர்நாடகாவின் பெங்களூர் தேசிய மனநல அகாடமி உறுப்பினராகவும் இவர் பதவி வகித்து வருகிறார்.  அத்துடன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நெறிமுறை குழு தலைவராகவும் , நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாவின் இயக்குனர் தேர்வு கமிட்டி தலைவராகவும் நாகராஜ் பொறுப்புடன் செயல்பட்டு வந்தார். 

death

இந்நிலையில் மருத்துவர் நாகராஜ் நள்ளிரவு  12 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இவர் எய்ம்ஸ் மருத்துவமனை  தலைவராக நியமிக்கப்பட்டார்.  மறைந்த நாகராஜன் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.