இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி

 
tn

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.

high court

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி  மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு  பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில்  நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின்  பொறுப்பு தலைமை  நீதிபதியாக பதவியேற்றார்.  அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பதவி வகித்த இவரை உச்ச நீதிமன்றம் கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது . அதன்படி  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத்  பண்டாரியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார்.

ttn

இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றார்.   இந்நிலையில் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.  இவருக்கு அடுத்ததாக மூத்த நீதிபதி எம்.துரைசாமியை  பொறுப்பு தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.