பன்றி காய்ச்சலால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian

பன்றி காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும் என்பதால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார். 

அரசு முறை பயணமாக தமிழக வந்துள்ள மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சேம்ஸ் ஜே.கே.சங்கமா தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியனை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மேகாலயா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

ma subramanian

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமண்ணியன் கூறியதாவது: பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.  மேலும், 89 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 264 பேர், அரசு மருத்துவமனைகளில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும், எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை.