ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

 
dhoni

ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர்  எம்.எஸ். தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

There Are A Lot Of Uncertainties": MS Dhoni On Future With Chennai Super  Kings | Cricket News

கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார்  ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்பு நிலுவையில்  உள்ளது.

இந்த வழக்கில்
 ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளை களங்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறியுள்ளதால்  ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரிடம் அனுமதி கேட்டு இருந்தார். அவர் அனுமதி வழங்கி இருந்த நிலையில்  ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சார்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்த து. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி பி. என். பிரகாஷ் நீதிபதி டீக்காரமன், அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.