அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி! திமுக மீது விஜயபாஸ்கர் புகார்

 
vijayabaskar

நாளை கரூர்  மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கரூர் அதிமுகவை சேர்ந்த  மாவட்ட கவுன்சிலர் சிவானந்த்த்தை போலீசார்  கைது செய்ய முயற்சித்துள்ளார்.

Transport Minister M R Vijayabaskar: Time to pay back DMK candidate ||  Transport Minister M R Vijayabaskar: Time to pay back DMK candidate

கடந்த ஓராண்டுக்கு முன்னர் சிவானந்தத்தின் உறவினர் பெண்மணி ஒருவர் சிவானந்த்த்தின் மாயனூர் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.  இது தொடர்பாக மாயனூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்திருந்தனர்.  இந்த வழக்கில் விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் எனக் கூறி இன்று காலை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் சிவானந்த்த்தின் பெட்ரோல் பங்கில் குவிந்தனர்.  நாளை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று தன்னை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் எனக் கூறி சம்மனை வாங்க சிவானந்தம் மறுத்தார். தகவலறிந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் 100 க்கணக்கான அதிமுகவினர் சிவானந்த்த்தின் பெட்ரோல் பங்க் முன்பு குவிந்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “நாளை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை மிரட்டி பணிய வைக்க  முயல்கின்றனர். இரண்டு நாள்களுக்கு  முன்னர் வசந்தா என்ற அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணவர் பழனிசாமியை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர்.  இப்போது, மற்றொரு அதிமுக ஊராட்சி உறுப்பினரரான சிவானந்தத்தை கைது செய்ய முயற்சி செய்கின்றனர்.  கரூர் மாவட்ட காவல் துறை மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.