மகளின் திருமண வரவேற்புக்கு முதலமைச்சரை அழைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

 
MKstalin tweet

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு. 1995ல் திருமணம் செய்த இவர்களுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாஸ்தீஷ் ஷேக் முகமதுவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்

இதனை தொடர்ந்து. நேற்று முன் தினம்  அவர்களின் திருமணமும் எளிமையாக நடந்தது. மணமக்களின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட .ஆர்.ரஹ்மான்,  “எல்லாம் வல்ல இறைவன், தம்பதியரை ஆசிர்வதிக்கட்டும். உங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கும் முன்கூட்டியே நன்றி”எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், தனது மகள் கதீஜா ரஹ்மான் மற்றும் மருமகன் ரியாஸ்தீன் சேக் முகமது ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, 10.6.2022 அன்று கும்மிடிப்பூண்டியில் நடைபெறவுள்ள தனது மகள் திருமண வரவேற்பு விழாவிற்கான அழைப்பிதழையும் வழங்கினார். இந்த தகவலை  ஏ.ஆர்.ரகுமானின் குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதிகளுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.