வைகோ கொள்கை ஹீரோ, லட்சிய ஹீரோ, தியாகத்தால் உருவான ஹீரோ- முதலமைச்சர் புகழாரம்

 
வைகோ முக ஸ்டாலின்

மதிமுகவின் பொது செயலாளர் வைகோவின் அரசியல் வாழ்க்கையை ஆவணப்படமாக  மாமனிதன் வைகோ The real Hero என்ற பெயரில் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையங்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

உதயசூரியன் சின்னத்தில் போட்டி- தேர்தலுக்குப் பின் "திமுகவுடன் மதிமுக  இணைப்பு"- வைகோ அதிரடி திட்டம் | MDMK to merge with DMK after Assembly  Election? - Tamil Oneindia

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வைகோ ரியல் ஹீரோ மட்டுமல்ல, கொள்கை ஹீரோ, லட்சிய ஹீரோ, தியாகத்தால் உருவான ஹீரோ, எழுச்சிமிக்க ஹீரோ, உணர்ச்சி மிக்க ஹீரோ, போராளி ஹீரோ. உயரத்தில் மட்டுமல்ல, கொள்கை, லட்சியம், தியாகத்திலும் உயர்ந்தவர் வைகோ. மாணவரணியில் இருந்தபோது வைகோவிடம் தேதி கேட்டு கூட்டம் நடத்தியவன் நான்

நெருக்கடி காலத்தில் சிறைகளில் இருந்த அனைவருக்கும் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தியவர் வைகோ. பொடாவில் கைதாகி சிறையில் இருந்த வைகோ, குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார். கலைஞர் சொல்லியனுப்பினார் என்ற போது, படித்து பார்க்காமையிலேயே, தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர். பிரச்சாரக்கூட்டங்கள், மாநாடுகளில் லஞ்ச் நேரத்தில் தான் வைகோ பேசுவார். அப்போது தான் கூட்டம் கலையாது. வைகோவின் அரசியல் வாழ்வை பேச நேரமில்லை. பேசிக்கொண்டே செல்லலாம். எழுச்சி, உணர்ச்சியுடன் நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடமாக வைகோவின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கித்தந்துள்ள துரை வைகோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டி- தேர்தலுக்குப் பின் "திமுகவுடன் மதிமுக  இணைப்பு"- வைகோ அதிரடி திட்டம் | MDMK to merge with DMK after Assembly  Election? - Tamil Oneindia

கலைஞர் உடல்நலம் குன்றி வீட்டில் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த வைகோவை, கருப்புத்துண்டை வைத்து அடையாளம் கண்டுகொண்டார் கலைஞர். கலைஞரிடம் உங்களுக்கு பக்கபலமாக இருந்ததுபோல், ஸ்டாலினுக்கும் இருப்பேன் என்று கூறினார். வைகோவுக்கு துணையாக நானும் இருப்பேன், வைகோவின் உடல்நலன் எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே முக்கியம். அதனால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு செல்லுங்கள் என்று கூறினேன். என் விருப்பத்தை கேட்டுக்கொண்டதற்கு நன்றி. வைகோ தன் உடல்நலனை பார்த்துக்கொண்டு சமுதாயத்துக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும், நன்கு வாழ வேண்டும்” எனக் கூறினார்.