அதிமுக ஆட்சி சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தையே சீரழித்துவிட்டது- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

வட சென்னையில் மழைநீர் தேங்கி இருப்பதாக புகார் வந்திருக்கிறது, தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

EXCLUSIVE PRESS MEET Please Wait MK Stalin Reacts To Ramamohan Roa - YouTube


தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின்  பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார் . மழை,வெள்ள பாதிப்பு தொடர்பாக  பொதுமக்கள் புகார் அளிக்க எழிலகத்தில் அவசர கால செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை, மற்றும் மழைக்கால மீட்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டு வருகிறார். அவருடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடனிருந்து செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “வடசென்னையில் மழை பாதிப்புகள் குறித்த கேள்விக்கு, வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்திருக்கிறது. தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருகிறோம். பத்தாண்டு கால அதிமுக ஆட்சி சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தையே சீரழித்துவிட்டு சென்று இருக்கிறார்கள். அதை எல்லாம் சரி செய்ய ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் சரி செய்து விடுவோம் என்று நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.