தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் ஸ்டாலின்

 
mkstalin

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

eps

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “கடந்த நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலை உயர்ந்த போதைப் பொருள் பிடிபட்டதாக கடலோர காவல் படை அதிகாரி தெரிவித்த்துள்ளார். அவை சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது. அதனுடைய உண்மை நிலை என்ன? முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “போதை பொருள் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை இந்த ஆட்சி ஒரு புதிய வரலாற்றை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா நடத்தப்பட்டது. 2022 முதல் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நட்டில் 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 250 எதிரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Tamil Nadu CM Stalin, Opposition leader EPS trade barbs over waterlogging  in Chennai | Cities News,The Indian Express

இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நானே உயர் அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்பிகளோடு ஆய்வு நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிரேன். இந்த நடவடிக்கைகளில் திமுக ஆட்சியில் தான் தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதோடு வழக்குகளை திறம்பட நடத்தி தண்டனை பெற்றுத் தருவது நடந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்தி ஆய்வு செய்யவில்லை. அது இப்போதுதான் நடக்கிறது. இந்த ஆட்சியில் நடத்தப்பட்டது போல கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பத்தாண்டு கால உங்களுடைய ஆட்சியில் ஆட்சியில் நடத்தப்படவே கிடையாது.

போதைப்பொருள் புழக்கம் அதிமுக ஆட்சியில் நோய் போல வளர்ந்து வந்தது. அதிமுக ஆட்சியில் போதை பொருட்களின் தடுக்காததால் புற்றுநோயாக வளர்ந்துள்ள அதனை தடுக்க இப்பொழுது நாங்கள் இவ்வளவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கிறோம்” என்றார்.