அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!!

 
stalin

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  ஆலோசனை  மேற்கொள்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில்  அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது.  துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

stalin

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மட்டும் இன்றி செயலாளர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள்?துறை ரீதியாக என்னென்ன பணிகள் செய்துள்ளனர்? எந்த மாதிரியான பணிகள் இன்னும் தேக்க நிலையில் உள்ளது என்பது குறித்து முதல்வர் கேட்டறிவார் என்று தெரிகிறது.  அத்துடன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துவிட்ட நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் எந்த நிலையில் உள்ளது ? துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன? எவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை ?எவை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் முழுமையாக விசாரிக்க உள்ளார் . 

stalin

அதேபோல் துறைவாரியாக  நிதிநிலை மற்றும் பொருளாதார ரீதியாக எந்த துறை பின்தங்கியுள்ளது? எந்த துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி வரி மூலம் வரும் வருவாயை அதிகரிப்பது  தொடர்பாகவும் இந்த சந்திப்பில் ஆலோசனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.