கலகத் தலைவன் பார்த்தீங்களா? படம் எப்படி இருக்கு! அமைச்சரிடம் ரிவியூ கேட்ட முதலமைச்சர்

 
mkstalin

காலை நடை பயணத்தின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிவ்யூ கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கலகத் தலைவன். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது கலகத்தலைவர் படம் எப்படி இருக்கு மா.சு.? பார்த்தீங்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்நாளே படத்தை பார்த்துவிட்டதாகவும், ரொம்ப நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். சில படங்களில் பாடல் வரும்போது பார்வையாளர்கள் எழுந்து செல்வர் ஆனால் கலகத்தலைவன் திரைப்படத்தை மக்கள் எழுந்து செல்லாமல் ரசித்தனர் என அமைச்சர் மா.சு.தெரிவித்தார். அதற்கு மு.க.ஸ்டாலின் மேக்கிங் நன்றாக இருப்பதாக கூறினார்.