தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
tn

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

stalin

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4:30 மணியளவில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் , கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளன. திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில் திமுக தேநீர் விருந்தில்  பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்தது.

rn ravi

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் இன்று ஆளுநர் மாளிகையில் வழங்க உள்ள தேநீர் விருந்து முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் பங்கேற்பதாக செய்தி வெளியாகி உள்ளது.  முன்னதாக இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்,  வருகை புரிந்த ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.  இதையடுத்து இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டனர்.