செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு!

 
stalin

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகளை இன்று ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.  அத்துடன்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 9ஆம் தேதி  பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

tn

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 5 மாநகர பேருந்துகளிலும், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் 10 பேருந்துகளிலும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் "நம்ம செஸ், நம்ம பெருமை" - "இது நம்ம சென்னை , நம்ம செஸ்" - "வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு" போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் ட்ரோன் கேமரா பறக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

mk Stalin biopic

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகளை இன்று ஆய்வு செய்கிறார். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது