அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து சென்னை ஆர்.கே. சாலையில் அரசு பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக பயணம் செய்தார் முதல்வர் முக ஸ்டாலின். மேலும் இலவச பேருந்து திட்டம் குறித்த பெண் பயணிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

tn
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.  இதையடுத்து இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் உள்ள  கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

tn

இதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு மு.க. ஸ்டாலின் விரைந்தார் . அங்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள்  அறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அறிவாலயத்திற்கு செல்வதற்காக ராதாகிருஷ்ணன் சாலையில் அவரது கான்வாய் வாகனம் சென்றது.  அப்போது ராதாகிருஷ்ணன் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்த சொன்ன முதல்வர் அங்கு வந்த பேருந்தில் திடீரென ஏறினார்.

tn

பெரம்பலூரில் இருந்து பெசன்ட்நகர் செல்லக்கூடிய 29 சி மாநகர பேருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பயணம் மேற்கொண்டார்.  பெண்களுக்கு வழங்க கூடிய இலவச பேருந்து டிக்கெட் ஆகியவை குறித்து நடத்துநரிடம் கேட்டு அறிந்த அவர் , அங்கிருந்த பயணிகளிடமும் உரையாற்றினார். பொதுமக்களிடம் பேருந்து நேரத்திற்கு வருகிறதா ?இலவச டிக்கெட் சரியாக வழங்கப்படுகிறதா ?என்பதை கேட்டு அறிந்த முதல்வர் ஸ்டாலின்,  சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.