அவ்வை நடராஜன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதலமைச்சர் அறிவிப்பு

 
stalin

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழறிஞர் ஔவை நடராஜன்  உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85. சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.  இன்று மாலை 3 மணிக்கு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.  

MK Stalin

இந்நிலையில், மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூத்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) அவர்கள் அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் பெருந்தகை ஒளவை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த ஆணையிட்டுள்ளார். 


இதேபோல்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழன்னையும் தேம்பி அழும் இழப்பு!தமிழாய்ந்த தமிழறிஞர் ஔவை நடராசன் நம்மைவிட்டு பிரிந்தார் எனும் துயர்மிகு செய்தியால் வாடி நிற்கிறோம். காவல்துறை மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். தமிழுள்ள வரை அவரது புகழ் நம்மிடையே நிலைத்து நிற்கும்! என பதிவிட்டுள்ளார்.