எம்ஜிஆர் பிறந்தநாள் : "சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர்" - எடப்பாடி பழனிசாமி புகழாரம்!!

 
tn

மறைந்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்தார் எம்ஜிஆர்.  தமிழ் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர் எம்ஜிஆர்.  1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமான இவர்,  பின்னர் கதாநாயகனாக உருவெடுத்தார்.  அண்ணாவின் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த எம்ஜிஆர்,  அவரது மறைவுக்குப் பிறகு கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.  இதன்பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதன் பொதுச்செயலாளராகி , சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் . எம்ஜிஆருக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.



எம்ஜிஆரின் பிறந்தநாளை ஒட்டி இன்று அதிமுக தலைமை அலுவலகம் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர்  பக்கத்தில், "கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன். ஏழை எளியோர் பசிதீர்த்த வள்ளல், இடஒதுக்கீட்டை 49% இருந்து 68% ஏற்றிய சமூகநீதி காவலர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத  நம் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் பிறந்தநாளில் அவர் புகழை போற்றி,தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து,கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.