காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது -நாளை கரையைக் கடக்கும்

 
c


 காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.    ஆழ்ந்த காற்றழுத்த பகுதி வலுவடைந்துள்ளதால் வட தமிழக கடலோர பகுதிகள்,  புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

cyl

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியில் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்றும், நாளை கரையை கடந்த வின்னர் அரபிக் கடலை நோக்கி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த தாற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.   இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளை நகர்ந்து வருகிறது என்பதால் இதன் காரணமாக தமிழகம் , புதுச்சேரி- காரைக்காலில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

  மிக கனமழை பெய்து வருவது வருவதால்  தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இன்று பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.