சாதி பிரச்சனையால் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு- காதல் ஜோடி தற்கொலை

 
suicide

தாம்பரம் அருகே இருவேறு சமுகம் எனப் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்காததால் பட்டதாரி காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரனை  அண்ணா தெருவைச் சேர்ந்தவர் எம்.காம் பட்டதாரியான ஜெயராமன் (26) தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில்  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் இவருடைய காதலி உத்திரமேரூரைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான  யுவராணி (24) சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் 5 வருடமாகக் காதலித்து வந்த நிலையில் நேற்று மதியம் ஜெயராமன் வீட்டிற்கு யுவராணி வந்துள்ளார்,இருவரும் இணையம் மூலம் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெயராமனின்  தாய் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு  வந்து பார்த்த போது ஒரே புடைவையில் ஜெயராமன் ,மற்றும் யுவராணி தூக்கில் தொங்கிய படி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கதறி அழுதுள்ளார். இதனைக் கண்ட  அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பீர்க்கன்காரனை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஜெயராமன்,யுவராணியும் திருமணம் செய்ய முடிவு செய்து பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர் அதற்க்கு யுவராணியின் பெற்றோர் இறுவேறு சமுகம் என்பதால் சம்மதிக்க மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த இருவரும் இந்த விபரீத முடிவில் ஈடுபட்டது தெரியவந்தது.