லவ் யூ சார் - நம் அன்பின் நட்பைக் கொண்டாடுகிறேன்- கமலுக்கு சொல்லும் குஷ்பு

 
kh

லவ் யூ சார் என்று உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு.

kh

’’என் அன்பு நண்பரே, இன்று உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடும் போது, உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் பெருக வாழ்த்துக்கள். நான், நமது மரியாதை மற்றும் அன்பின் நட்பைக் கொண்டாடுகிறேன். லவ் யூ சார்’’என்று கூறியிருக்கிறார் குஷ்பு.
 
வெற்றி விழா படத்தில் குஷ்பு நடித்திருந்தாலும்  அப்படத்தில் அவர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.   கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த  மைக்கேல் மதன காமராஜன் படத்தில் குஷ்பு நடித்தார்.   அப்படத்தில்  ரம்பம்பம் ஆரம்பம் பாடலுக்கும்,  பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம் பாடலுக்கும் கமலுடன் இணைந்து ஆடிய ஆட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

kku

இளையராஜா தயாரித்து ஆர்.வி.உதயகுமார் இயக்கி, கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் நடித்ததும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பின்னர் கமல்ஹாசனுடன் நடிக்காவிட்டாலும், தொடர்ந்து அவருடன் நட்பு பாராட்டி வருகிறார் குஷ்பு.  கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்க முற்பட்டபோது, ’’நண்பர் கமல் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு எனது ஆதரவும், அன்பும் எப்போதும் உண்டு” என்று குஷ்பு தெரிவித்திருந்தார்.  கமல்ஹாசன் கட்சி தொடங்கியதும் அக்கட்சியில் குஷ்பு இணையப்போகிறார் என்று செய்திகள் வந்தன.  குஷ்பு மக்கள் நீதி மய்யத்தில் இணையாவிட்டாலும் கூட, கமஹாசனுடன் தொடர் நட்பில் இருந்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் குஷ்பு இணைந்த போது விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து அவர் தெரிவித்த கருத்து பற்றி கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து இருந்தார் .  அது குறித்த கேள்விக்கு,  கமல்ஹாசன் என் நல்ல நண்பர்.  என் மீது அவருக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு.  என்னை திட்டலாம் என்னை அணைத்துக் கொள்ளலாம்.  என்னை பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.  கமலஹாசனுக்கு அந்த உரிமை இருக்குது என்று நட்பை விட்டுக்கொடுக்காமல் பேசினார் குஷ்பு.

khus

அண்மையில் விக்ரம் படத்தை  கமல்ஹாசன் தோள் மீது சாய்ந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு,  ‘’மை ஹீரோ.. மை பிரெண்ட்.. மை விக்ரம்’’என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 

இன்று நவம்பர் -7  கமல்ஹாசன் பிறந்த நாளில், அவரை வாழ்த்தி பதிவிட்டு, #HappyBirthdayKamalHaasan #Ulaganayagan என்ற ஹேஷ்டேக்குகளையும் தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.