சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வருகிற 28ம் தேதி உள்ளூர் விடுமுறை

 
local holiday

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடபெறவுள்ளதை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை  44வது  உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும்.   இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த  வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருந்தாலும், அதன்   தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

chess

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடபெறவுள்ளதை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. , சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.