தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை

 
tasmac

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 252.34 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழகத்தின் வருவாயில் டாஸ்மாக் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, மே தினம் உள்ளிட்ட தினங்களில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம்.  டாஸ்மாக் மூடப்படுவதற்கு முந்தைய நாட்களில் மதுப்பிரியர்கள் அடுத்த நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி சேமித்து வைப்பது வழக்கம். இதேபோல் உழைப்பாளர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதால், டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..இந்த நிலையில், மதுப்பிரியர்கள் நேற்றைய தினமே அதிகளவில் மதுபானங்கள் வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர்.அதன் படி, நேற்று ஒரே நாளில் 252.34கோடி க்கு மதுபானங்கள் விற்பனை நடைப்பெற்றிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.54.89 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னை மண்டலத்தில் ரூ.52.28 கோடிக்கு நேற்று மது விற்பனை நடந்துள்ளது. 

Tasmac

அதேபோல் திருச்சி மண்டலத்தில் 49 கோடியே 78 லட்ச ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 46 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 48 கோடியே 67 லட்ச ரூபாய்க்கும் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.