மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் தினம் வீரவணக்க நாளையொட்டி மொழிக் காவலர்கள் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

‘தமிழைக் காக்க போராடிய’  மொழிப்போர் தியாகிகள் தினம்!

தமிழ் மொழியை காக்க, உயிர் நீத்த தியாகிகளின் மொழிப்போர் தினம் இன்று. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பல உயிர்களை பலி கொண்ட அந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போராட்டத்தின் போது  உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.உடலையும் உயிரையும் அன்னைத் தமிழ்மொழிக்காக தியாகம் செய்த அருபெரும் தீரர்களான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.  அந்த வகையில் இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில், தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் , மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,  சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி , அரவிந்த் ரமேஷ்,  பிரபாகர் ராஜா,  துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். 


இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திதான் இந்தியா எனின் அந்நிலை மாற்ற இன்னுயிரை ஈந்தேனும் தமிழ்மானம் காப்போம் என உயிர்நீத்த மொழிக்காவலர்களின் திருவுருவப் படங்களுக்குக் கிண்டி மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினேன். இனி ஓர் உயிரையும் இழக்காமல் நம் உரிமையை நிலைநாட்டுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.