கண்ணை கட்டி விளையாடி கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள்

 
d

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது சென்னை அமர்வு நீதிமன்றம். 

 தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி.   இவர் குருவார்பட்டியைச் சேர்ந்த அந்தோணி ஜெகனை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.  அதனால் வினோதினியை மென்பொறியாளர் கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

b

 திருமணத்திற்கு பின்னர் வினோதி கணவருடன் சென்னையில் வசித்து வந்திருக்கிறார்.   ஆனாலும் பழைய காதலனுடன் உறவை வளர்த்து வந்திருக்கிறார் வினோதினி. கடந்த 2018 ஆம் ஆண்டில் கதிரவனை திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.   முன்கூட்டியே திட்டமிட்டபடி அங்கு கண்ணை கட்டி விளையாடுவது போல் நடித்து கதிரவனை அந்தோணி ஜெகனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார் வினோதினி.

 இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தான் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது .  இந்த சம்பவத்தில் வினோதினியும் அதோனி ஜெகனும்  கைது செய்யப்பட்டனர்.  குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்.