"வஉசி எனும் பெருமகனைப் போற்றி வணங்கிடுவோம்" - டிடிவி தினகரன் ட்வீட்

 
ttv

வ.உ.சி  பிறந்தநாளையொட்டி டிடிவி  தினகரன் அவரை போற்றி வணங்கியுள்ளார்.

tn

வ.உ. சிதம்பரம் பிள்ளை இந்திய விடுதலை சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.  ஆங்கிலேய கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தின் மூலம் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல் வழி போக்குவரத்தை மேற்கொண்டார் . இதன் காரணமாக ஆங்கிலேய அரசால் தேச துரோகியாக குற்றம் சாட்டப்பட்ட இவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழிலும்,  ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர் ,சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர்.  தான் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டதுடன்,  மற்றவர்களையும் பங்கு கொள்ள இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விடுதலைப் போரில் தன் சொத்து சுகங்களை இழந்து, ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. சிறையில் செக்கிழுத்து, அவர் புரிந்த தியாகங்களால் நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம். அந்த நன்றியோடு, வ.உ.சி எனும் அப்பெருமகனைப் போற்றி வணங்கிடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.