வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் - ஓபிஎஸ் ட்வீட்

 
ops

சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

National Flag

நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  குடியரசு தின விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என். ரவியை  முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.  இதையடுத்து முப்படை வீரர்கள்,  காவல்துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது.  அத்துடன் பள்ளி,  கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், " அந்நியர்களின் அடக்கு முறையை தகர்த்தெறிந்து இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசித்த பின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த திருநாளான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இத்திருநாளில் தாய்த் திருநாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்க, நாம் அனைவரும் சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.